SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சந்திராயன்-2 திட்டத்தில் முக்கிய மாற்றம் இல்லை : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

2018-08-13@ 00:52:21

பெங்களூரு: சந்திராயன்-2 திட்டத்தில் முக்கிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.இந்திய  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆராய்ச்சி செய்வதற்கான  முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே சந்திராயன்-1 என்ற தி்ட்டத்தை  வெற்றிகரமாக நடத்தி இஸ்ரோ சாதனை படைத்த நிலையில், இரண்டாவது முயற்சியாக  சந்திராயன்-2  என்ற திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்தது. நிலவை ஆராய்ச்சி  செய்யும் இத்திட்டத்தில்  முக்கியமான மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள்   தெரிவிக்கின்றன. பழைய திட்டத்தில் வெளி வட்டபாதையில் விண்கலத்தை நிலை  நிறுத்திவிட்டு ரோவர் மட்டும் நிலவில் இறக்கப்பட்டு  ஆராய்ச்சி நடந்தது. சந்திராயன்-2 திட்டத்திலும் அதுபோல்தான் செய்யலாம்  என்ற நிலையில் இஸ்ரோ அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் முக்கிய திருத்தம்  செய்யப்பட்டது.

அதாவது வெளிவட்ட பாதையில் விண்கலத்தை நிலை நிறுத்தாமல்  நேரடியாக நிலவின் மீதே விண்கலத்தை இறங்க செய்வது என்றும், அதன்பிறகு ரோவர்  வாகனத்தை இயக்கி நிலவின் தட்ப வெப்பம் உள்ளிட்ட காரணிகளை பதிவு செய்யலாம்  எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், “சந்திராயன்-2 திட்டத்தில்  பெரிய மாற்றம் எதுவும் செய்யவில்லை. நிலவுக்கு செலுத்தும் விண்கலத்தின்  உருவத்திலும் ரோவர் வாகனத்தின் வடிவிலும் இன்ஜினியரிங் நுட்பத்தின்  உதவியால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அத்திட்டத்தில் வேறு எந்த  மாற்றமும் செய்யவில்லை. எளிமையாக கூறவேண்டும் என்றால் சந்திராயன்-2  விண்கலம் மற்றும் அதன் தொழில்நுட்ப கருவிகளின் வடிவத்தை  மாற்றி அமைத்துள்ளோம்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

  • armyyyyyy122233

    கேரளாவில் கன மழைக்கு 167 பேர் பலி : மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்