SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்துக்குட்டிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது : ஜெய் ஆனந்த் பேச்சுக்கு டிடிவி.தினகரன் பதில்

2018-08-13@ 00:52:19

சென்னை: ஏழரை சனி ஒழிந்துவிட்டது என்ற ஜெய் ஆனந்த் பேச்சுக்கு கத்துக்குட்டிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று  டிடிவி.தினகரன் பதில் அளித்துள்ளார்.  2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் அசோக் நகரில் உள்ள அமமுக தலைமையகத்தில் கட்சியின் துணை பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆர்.கே நகர் தேர்தல் ஒரு முன்னோட்டம் மட்டுமே. அடுத்து வரும் 2 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதான கட்சி என்பதை நிரூபிப்போம். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் மாபெரும் வெற்றி பெருவோம். இதில் எந்த வித மாறுபட்ட கருத்தும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். ‘‘ஏழரை சனி ஒழிந்துவிட்டது என்று ஜெய் ஆனந்த் பேசியுள்ளாரே’’ என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்த தினகரன், ‘‘ஜெய் ஆனந்த் ஒரு கத்துக்குட்டி அவருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஏற்கனவே, நான் ‘‘இந்த பீடைகள் எல்லாம் ஒழிந்து விட்டது, ஏழரை சனி ஒழிந்துவிட்டது, இனிமேல் எங்களுக்கு நல்ல காலம் தான்’’ என்று மன்னார்குடி கூட்டத்தில் கூறினேன். அவருடைய பேச்சு இந்த ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக உள்ளது. இவர்கள் வெரும் தற்காலிகம் தான். நாங்கள் தான் தமிழக அரசியலில் நிரந்தரம்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்