SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்ட வீரர் : சமூக வலைதளங்களில் பாராட்டு

2018-08-13@ 00:52:14

இடுக்கி: கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர், தனது உயிரையும் துச்சமாக எண்ணி, வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.கேரளாவில் கனமழை காரணமாக, 26 ஆண்டுக்குப் பிறகு இடுக்கி அணையின் 5 மதகுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அதிலிருந்து வெளியேறும் நீரால் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இடுக்கி அணையின் முதல் மதகு திறக்கப்பட்ட போது, அதன் அருகே உள்ள செருதோனி தரைப்பாலத்தை வெள்ள நீர் தரைமட்டமாக்கியது.அந்த சமயத்தில் அணை திறக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாலத்திற்கு அப்பால் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஆனால், கடைசி நிமிடத்தில் 2 பேர் சிறுமியுடன் பாலத்தை கடக்க பயந்தபடி நின்றனர். அவர்கள் காப்பாற்றுமாறு கதறியதை கேட்ட, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர் கன்ஹயா குமார், தனது உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக பாலத்தில் ஓடிச் சென்று குழந்தையை தனது தோளில் சுமந்தபடி திரும்பினார். அவருடன் மற்ற 2 பேரும் வந்த அடுத்த நொடியே அந்த பாலம் வெள்ளத்தில் மூழ்கி இடிந்தது.இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கன்ஹயாவின் துணிச்சலை பலரும் பாராட்டி உள்ளனர். பீகாரை சேர்ந்த அவர் கூறுகையில், ‘‘நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில், பாலத்தின் மறுமுனையில் இருந்தபடி அவர்கள் கூக்குரலிட்டனர். உடனடியாக சென்று காப்பாற்றினேன்’’ என்றார்.இவரைப் போல 100 பேர் கொண்ட 14 தேசிய பேரிடர் மீட்பு குழு கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்