SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உ.பி கூட்டணியில் இருந்து காங்கிரசை நீக்கினால் பாஜ.வுக்குதான் சாதகமாகும்

2018-08-13@ 00:52:13

புதுடெல்லி: ‘‘உ.பி கூட்டணியில் இருந்து சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் போன்ற எதிர்க்கட்சிகள் காங்கிரசை சிறுமையாக கருதி நீக்கினால் அது குறுகிய கண்மோட்டமாக இருக்கும், பா.ஜ.வுக்குத்தான் அது பலனளிக்கும்’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். அடுத்த மக்களவை தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.வை எதிர்க்கொள்ள சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஓரணியில் இணைய முடிவு செய்துள்ளன. உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது செல்வாக்கு குறைவாக உள்ளதால், அதை உ.பி. கூட்டணியில் இருந்து விலக்கவும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்ற சர்ச்சைக்குள் இப்போது செல்ல வேண்டாம். தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதிலேயே முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதன்பின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம் என ராகுல் தெளிவாக கூறிவிட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற எதிர்க்கட்சிகள் காங்கிரசை சிறுமையாக கருதி உ.பி. கூட்டணியில் இருந்து விலக்கினால் அது குறுகிய கண்ணோட்டமாக இருக்கும். பா.ஜ.வுக்குத்தான் பலனளிக்கும். அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ எதிர்க்கொள்வதற்காக உ.பி. கூட்டணியிருந்து காங்கிசை நீக்கிவிட கூடாது. 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றது என்பதை மனதில் கொள்ள வேண்டும். உ.பி.யில் சமாஜ்வாடிக்கு 24 சதவீதம் ஓட்டுக்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 25 சதவீத ஓட்டுக்களும் இருக்கலாம். காங்கிரஸ் கட்சிக்கு 10 சதவீத ஓட்டுகள் உள்ளன. பல தொகுதிகளின் வெற்றிக்கு அது முக்கியமானது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான, ஆக்கப்பூர்வமான அரசு தேவை என்றால், காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்