SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இமாச்சலில் இரண்டு நாட்களுக்கு கனமழை

2018-08-13@ 00:46:36

ஷிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் முதல் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. ஹமிர்பூர், பிலாஸ்பூர், கங்ரா மற்றும் உனா மாவட்டங்கள் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குடியிருப்புக்களை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாக்கி உள்ளனர்.

மாநிலத்தில் அதிகபட்சமாக நைனா தேவி 130.8மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மணாலியில் குறைந்தபட்சமாக 13.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. அதிகபட்சமாக புந்தாரில் 32டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இமாச்சலில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்