SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிர் பலி வாங்கும் செயின் பறிப்பு சம்பவங்கள் மனைவி சங்கிலியை காப்பாற்ற முயற்சி கத்தியால் குத்தப்பட்ட முதியவர் பலி: தப்பிய கொள்ளையர்களுக்கு வலை

2018-08-13@ 00:46:35

சென்னை: பையனூர் அருேக பண்ணை வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன், மனைவியிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையர்களை தடுக்க முயன்றபோது, கத்தியால் குத்தப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருப்போரூர் - மாமல்லபுரம் சாலையில் உள்ள பையனூர் கிராமத்தில் பண்ணை வீடு ஒன்று அமைந்துள்ளது. இங்கு, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஹேமச்சந்திரா ரெட்டி (75) என்பவர், தனது மனைவி ஜெயாம்மா (68) என்பவருடன் வசித்து வந்தார். இவர்களது மகன் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 9ம் தேதி காலை ஹேமச்சந்திரன் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவி ஜெயா வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த இருவர், அவரிடம் தண்ணீர் கேட்டனர். ஜெயா தண்ணீர் கொண்டு வர வீட்டின் உள்ளே சென்றார். அவரை தொடர்ந்து பின்னால் சென்ற இருவரும், கத்தி முனையில் ஜெயாவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர். ஜெயா கூச்சல் போடவே அவரது கணவர் ஹேமச்சந்திரா ரெட்டி ஓடி வந்து கொள்ளையர்களுடன் சண்டை போட்டார். அப்போது கொள்ளையர்கள் கணவன், மனைவியை யாக கத்தியால் குத்தினர். இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர். ஜெயம்மா கழுத்தில் இருந்த 8 சவரன் செயினை பறித்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பினர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், கடந்த 2 நாட்களாக  சிகிச்சை பெற்று வந்த ஹேமச்சந்திரா ரெட்டி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மனைவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, மாமல்லபுரம் போலீசார், கொள்ளை வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.




மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்