SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2019 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை கவனிக்க அமமுக பொறுப்பாளர்கள் நியமனம்: டிடிவி.தினகரன் அறிவிப்பு

2018-08-13@ 00:46:33

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகள் 11 மண்டலங்களாக  பிரிக்கப்பட்டு அதற்கான அமமுக மண்டல பொறுப்பாளர்களை டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி. தினகரன் வெளியிட்ட அறிவிப்பு: 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகள் 11 மண்டலங்களாக  பிரிக்கப்பட்டு அதற்கான அமமுக மண்டல பொறுப்பாளர்கள் கீழ்கண்டவாறு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
மண்டலம்  1: பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ (வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர்), வி.சுகுமார் பாபு (அமமுக அமைப்புச் செயலாளர்),  பாராளுமன்ற தொகுதிகள்- வடசென்னை (தொகுதி எண் -2), தென்சென்னை (3), மத்தியசென்னை (4).
 மண்டலம்  2: ஜி.செந்தமிழன் முன்னாள் அமைச்சர், எம்.சௌந்தரபாண்டியன்,  பாராளுமன்ற தொகுதிகள்- திருவள்ளூர் (தொகுதி-1),  பெரும்புதூர் (5), காஞ்சிபுரம் (6).
மண்டலம்  3: பி.பழனியப்பன் எம்.எல்.ஏ, எஸ்.கே.செல்வம் முன்னாள் எம்.எல்.ஏ  பாராளுமன்ற தொகுதிகள்- கிருஷ்ணகிரி (தொகுதி- 9), தருமபுரி (10), கள்ளக்குறிச்சி (14), சேலம் (15).
மண்டலம்  4: பி.வாசுதேவன் அமமுக அமைப்புச் செயலாளர், என்.ஜி.பார்த்திபன் எம்.எல்.ஏ  பாராளுமன்ற தொகுதிகள்- அரக்கோணம் (தொகுதி- 7), வேலூர் (8), திருவண்ணாமலை (11).
மண்டலம்  5: எஸ்.அன்பழகன் முன்னாள் எம்.பி, வி.செந்தில்பாலாஜி  எம்.எல்.ஏ,  பாராளுமன்ற தொகுதிகள்- நாமக்கல் (தொகுதி- 16), ஈரோடு (17), திருப்பூர் (18), கரூர் (23).
 மண்டலம் 6: சேலஞ்சர் துரை(எ)ஆர்.துரைசாமி முன்னாள் எம்.எல்.ஏ, கே.தம்பி இஸ்மாயில்  பாராளுமன்ற தொகுதிகள்- நீலகிரி (தொகுதி- 19), கோயம்பத்தூர் (20), பொள்ளாச்சி (21).
 மண்டலம்  7: ஆர்.மனோகரன், ஆர்.சாருபாலா தொண்டைமான். பாராளுமன்ற தொகுதிகள்- திருச்சி (தொகுதி- 24), பெரம்பலூர் (25).
 மண்டலம்  8: சிவராஜ் முன்னாள் எம்.எல்.ஏ வி.டி.கலைச்செல்வன் எம்.எல்.ஏ, கே.ஜி.பி ஞானமூர்த்தி முன்னாள் எம்.எல்.ஏ, பாராளுமன்ற தொகுதிகள்- ஆரணி (தொகுதி-12), விழுப்புரம் (13), கடலூர்(26).
 மண்டலம்  9: எம்.ரெங்கசாமி எம்.எல்.ஏ, சிவா ராஜமாணிக்கம் அமமுக அமைப்புச் செயலாளர், பாராளுமன்ற தொகுதிகள்- சிதம்பரம் (தொகுதி- 27), மயிலாடுதுறை (28), நாகப்பட்டினம் (29), தஞ்சாவூர் (30), புதுச்சேரி.
 மண்டலம்  10: தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ, ஆர்.மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ. பாராளுமன்ற தொகுதிகள்-திண்டுக்கல் (தொகுதி- 22), சிவகங்கை (31), மதுரை (32), தேனி (33), ராமநாதபுரம் (35).
மண்டலம்  11: எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா அமமுக அமைப்புச் செயலாளர், ஆர்.பி.ஆதித்தன் அமமுக அமைப்புச் செயலாளர், பாராளுமன்ற தொகுதிகள்- விருதுநகர் (தொகுதி- 34) தூத்துக்குடி (36), தென்காசி (37), திருநெல்வேலி (38), கன்னியாகுமரி (39). இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்