SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

காலத்துக்கு ஏற்ற பாடத்திட்டம் இல்லாததால் இன்ஜினியரிங் படிப்பில் சேர ஆர்வம் இல்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

2018-08-13@ 00:46:31

சென்னை: இன்ஜினியர் மாணவர் சேர்க்கை சரிந்து இருப்பதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பெரும்பகுதி முடிவடைந்து விட்ட நிலையில், நடப்பாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை வரலாறு காணாத வகையில் சரியும் என்று தெரியவந்துள்ளது. பொறியியல் படிப்பு வாழ்க்கைக்கு உதவுவதாக இல்லாமல் ஏட்டுச் சுரைக்காயாக மாறியிருப்பதே இந்த அவலநிலைக்கு காரணமாகும். இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.  முதல் மூன்று கட்ட கலந்தாய்வில் 36,126 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ளிட்ட எந்தக் கல்லூரியிலும் அனைத்து இடங்களும் நிரம்பவில்லை. மொத்தம் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்ற இந்தக் கலந்தாய்வில் 71 கல்லூரிகளில் இதுவரை  ஒரே ஒரு மாணவர் கூட கலந்தாய்வு மூலம் சேரவில்லை. அதுமட்டுமின்றி, 214 கல்லூரிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது கடந்த காலங்களில் இல்லாத மிக மோசமான நிலைமை ஆகும்.

ஒரு காலத்தில் லட்சியப் படிப்பாக திகழ்ந்த பொறியியல், இப்போது வேறு எந்த படிப்பிலும் சேருவதற்கு  இடம் கிடைக்காத சூழலில் ஏதோ படிக்க வேண்டுமே என்பதற்காக படிக்கும் படிப்பாக சீரழிந்திருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். பொறியியல் படிப்பு சீரழிந்ததற்கு காரணம் காலத்திற்கு ஏற்ற வகையில் அப்படிப்புக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படாதது தான். கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்தில் பொறியியல் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவில்லை.  இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி) மற்றும் சில தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டம் மிகவும்  தரமற்றதாக உள்ளது. இந்த நிலையை மாற்றி பொறியியல் படிப்பை போட்டி நிறைந்ததாக மாற்றுவதற்காக அதன் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்