SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆறு, வாய்க்கால்களை முறையாக தூர் வாராததால் மேட்டூரில் 1 லட்சம் கனஅடி திறந்தும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை

2018-08-13@ 00:46:27

நாகை: மேட்டூரிலிருந்து 1 லட்சம் கனஅடி திறந்தும், திருமருகல் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. ஆறு, வாய்க்கால்களை தூர் வாராததே காரணம் என்றும், 13 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு 1.40 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நடப்பாண்டில் மட்டும் மேட்டூர் அணை 2வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதியும், டெல்டா மாவட்ட விவசாயத்திற்காகவும் அணையிலிருந்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் முடிகொண்டானாறு, திருமலைராஜனாறு, அரசலாறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணியாறு, ஆழியானாறு பராவடையானாறு ஆகிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளின் மூலம் திருமருகல் ஒன்றியத்தில் 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்தநிலையில் மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் 19ம் தேதியும், கல்லணையிலிருந்து கடந்த மாதம் 22ம் தேதியும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணை திறக்கப்பட்டு 22 நாட்கள் ஆகியும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஆறுகளுக்கும் வாய்க்கால்களுக்கும் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை.

ஆறு, வாய்க்கால்களை முறையாக தூர்வாராததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.  இதனால் சாகுபடி வேலையை தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர், பம்புசெட் பாசனத்தில் விவசாய பணிகளை துவக்கியுள்ளனர். திருமருகல் சீயாத்தமங்கை, அண்ணா மண்டபம், போலகம், தெற்குலேரி, திருப்புகழுர், திருச்செங்காட்டான்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், `தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் தண்ணீர் வந்து விடும்' என்று பொத்தாம் பொதுவாக பதில் சொல்கிறார்கள். நாகை ஒன்றிய பகுதிகளுக்கும் இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. மயிலாடுதுறை பகுதிகளில் காவிரியில் வந்த தண்ணீரும் நின்றுவிட்டது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த அறிவுரைகளை கூறி ஆறுகளுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்