SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

உயிருக்கு ஆபத்து இல்லை ராணுவத்தில் சேர இளைஞர்கள் முன்வர வேண்டும்: கமல்ஹாசன் பேச்சு

2018-08-13@ 00:36:14

சென்னை: கிண்டியில் இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் உள்ள திரையரங்கில் ''விஸ்வரூபம் 2'' படம், ராணுவ பயிற்சி வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நேற்று மாலை திரையிடப்பட்டது. முடிவில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இங்குள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கும், எனக்கும் கிட்டத்தட்ட 30 வருடம் தொடர்புண்டு. இந்த மையம் எனது ''மருதநாயகம்'' படத்துக்காக நான் கேட்ட கேள்விகளுக்கும், அதுகுறித்து ஆய்வு செய்வதற்கும் பேருதவி செய்துள்ளது. ''மருதநாயகம்'' படத்துக்காக நான் குதிரை ஏற்றம் மற்றும் ராணுவ பயிற்சி பெற அனுமதி கொடுத்திருந்தனர். இங்கு நான் பயிற்சி பெற்ற காலம் குறைவு என்றாலும், கற்றுக்கொண்டது நிறைய. இன்று (நேற்று) நான் சிறுவனாக அறிமுகமான ''களத்தூர் கண்ணம்மா'' படம் ரிலீசாகி, 59 வருடங்கள் நிறைவடைந்த நாள்.

''விஸ்வரூபம் 2'' படம் இன்னும் சில மாவட்டங்களில் ரிலீஸ் ஆகாததற்கு மறைமுக சதிதான் காரணம். விரைவில் அது மாறி படம் ரிலீசாகும். எனக்கு ரசிகர்கள் பலம் இருக்கிறது. இதுபோல் வேறு சில ராணுவ கதைகள் என்னிடம் இருக்கிறது. அதில் நான் நடிக்க முடியாது. வேறு நடிகர்கள் நடிக்கலாம். ராணுவத்தில் இளைஞர்களின் பங்களிப்பு இன்னும் அதிகரிக்க வேண்டும். ஆர்மியில் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து என்ற தவறான எண்ணம் இருக்கிறது. ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகருக்கு செல்லும்போது ஏற்படும் ஆபத்தை விட, மிக குறைவான ஆபத்துதான் இருக்கும். ஆனால், இங்கு வந்த பிறகு எதிர்கால வேலைவாய்ப்புகள் ஏராளமாக காத்திருக்கிறது. படித்தவர்கள் இந்த வேலைக்கு வர முயற்சிக்க வேண்டும். இது மிக முக்கியமான வேலை, அதுவும் நாடு காக்கும் வேலை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். நடிகை பூஜா குமார், இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்