SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவஸ்தான நிர்வாகத்தின் கெடுபிடியால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது திருப்பதி கோயில்

2018-08-13@ 00:36:08

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஏக கெடுபிடிகளால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டமின்றி கோயில் வளாகமும், திருமலையும் வெறிச்சோடி காணப்படுகிறது.இந்து கோயில்களில் ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 16ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.  இதற்காக 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. கும்பாபிஷேக விழாவையொட்டி இலவச தரிசனம், விஐபி, விவிஐபி தரிசனம், ₹300 கட்டண தரிசனம் உட்பட அனைத்து வகை  தரிசனத்துக்கும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து நேற்று 12ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை தினமும் 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் மட்டும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தான நிர்வாகம்  அறிவித்தது. தேவஸ்தானத்தின் முடிவை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை திருமலையில் குவிந்த 35 ஆயிரம் பக்தர்கள் நேற்று அதிகாலை ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.தேவஸ்தானத்தின் இந்த கெடுபிடி காரணமாக பக்தர்கள் வருகை அடியோடு குறைந்ததால் திருமலையில் மாடவீதிகள், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் காலியாக காட்சி அளிக்கின்றன. திருமலை பாலாஜி  பஸ் நிலையமும், திருப்பதி தேவஸ்தான பாலாஜி பஸ் நிலையமும், திருப்பதி பஸ் நிலையமும் வெளியூர் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
திருமலையில் பக்தர்கள் தங்கும் அறைகள் பெரும்பாலும் காலியாகவே பூட்டி வைக்கப்பட்டுள்ளன. திருமலையில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேநேரத்தில் நேற்று ₹1.54 கோடி  உண்டியல் மூலம் வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்