SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் ரெய்டு நடந்த அடுத்த நாளில் பீகார் அரசு காப்பகத்தில் 2 பெண்கள் மர்மச் சாவு

2018-08-13@ 00:36:06

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவின் நேபாளி நகர் காலனியில் அஸ்ரா அரசு காப்பகம் செயல்பட்டு வருகிறது. தனியார் தொண்டு நிறுவனம் நிர்வகித்து வரும் இக்காப்பகத்தில் 3 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 75 பெண்கள் தங்கி  உள்ளனர். இக்காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பெண்கள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி ராம் நகினா சிங் என்ற பன்சாரி (50) காப்பக பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அங்கிருந்து தப்பி வந்தால் பரிசு வழங்கி நல்ல வாழ்க்கை அமைத்து  தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக தெரிந்தது. அதன் பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இந்த காப்பகத்தில் இருந்து 3 இளம்பெண்கள் தப்பி ஓடி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காப்பக நிர்வாகம்  2 பெண்களை பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளது, 17 மற்றும் 21 வயது கொண்ட அந்த பெண்களுக்கு வாந்திபேதி, அதிக காய்ச்சல்  இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த பெண்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகமும், சிகிச்சையின் போது இறந்ததாக காப்பக நிர்வாகமும் கூறி வருகிறது. மேலும், இத்தகவல்  நேற்று காலைதான் போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் இறந்ததை மறைக்க நிர்வாகம் முயற்சி செய்துள்ளது.ஏற்கனவே இந்த காப்பகத்தில் இரவு நேரத்தில் புதிய நபர்கள் சென்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், 2 பெண்களின் மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு  பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்