SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நைபால் மரணம்

2018-08-13@ 00:36:02

லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளருமான நைபால் நேற்று காலை மரணமடைந்தார். மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட்டில் 1932ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி பிறந்தவர் வித்யாதர் சுராஜ் பிரசாத் நைபால். இந்திய இந்து குடும்பத்தில் பிறந்த இவர் தனது 18வது வயதில் பெற்றோருடன் லண்டனில்  குடியேறினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் இலக்கியம் படித்தார். நைபால் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 1971ம் ஆண்டு நைபாலுக்கு புக்கர் விருது  வழங்கப்பட்டது. 2001ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை நைபால் பெற்றார்.

இந்நிலையில் 85 வயதான நைபால் முதுமை காரணமாக லண்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று  உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர்  ெதரிவித்துள்ளனர். புகழ்பெற்ற எழுத்தாளரான நைபால் மறைவுக்கு பிரபல எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பதிவில், “நைபாலின் சிறந்த பணிகள் நினைவில் கொள்ளத்தக்கவை. அவரது மறைவு இந்த உலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

  • armyyyyyy122233

    கேரளாவில் கன மழைக்கு 167 பேர் பலி : மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்