SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

ஐதராபாத்தில் தேசிய புலனாய்வு படையினர் அதிரடி தலைமறைவு ஐஎஸ் தீவிரவாதியுடன் தொடர்பில் இருந்த 2 பேர் சிக்கினர்: இளைஞர்களை மூளைச்சலவை செய்தது அம்பலம்

2018-08-13@ 00:25:25

திருப்பதி: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஐஎஸ் தீவிரவாதியுடன் தொடர்பில் இருந்த 2 பேரிடம் தேசிய புலனாய்வு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாக தேசிய புலனாய்வு படைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் பாலாப்பூர்,  சையன் நகர், பேகம் பேட்டா உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு படை முகாமிட்டுள்ளன.இந்நிலையில், சந்தேகப்படும்படியான 20 பேரை பட்டியலிட்ட தேசிய புலனாய்வு படை அவர்களை விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஆசிஸ் பாபா நகரை சேர்ந்த அப்துல்  பாசித்(24), சந்திராயன் குட்டாவை சேர்ந்த அப்துல் காதிர்(18) ஆகிய இளைஞர்கள் 2 பேரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிடிபட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணை தொடர்பாக தெலங்கானா காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2016ம் ஆண்டு தீவிரவாத செயலில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை  கைது செய்தனர். அப்போது, தலைமறைவான ஆசிஸ் என்ற தீவிரவாதியுடன், தற்போது பிடிபட்ட இளைஞர்கள் 2 பேரும் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் ஐதராபாத்தில் உள்ள இளைஞர்களை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க மூளைச்சலவை செய்யும் பணியில் ஈடுபட்டதும், இந்தியாவில் பல இடங்களில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் சார்பில் தேச துரோக  செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதும் தேசிய புலனாய்வு படை விசாரனையில் தெரிய வந்துள்ளது’’ என்றனர்.ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த 2 பேரை தேசிய புலனாய்வு படையினர் பிடித்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்