SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

அதிகபட்ச வேகத்தில் செல்ல அனுமதி ரயில்கள் சென்றடைவதில் இனி தாமதம் ஏற்படாது

2018-08-13@ 00:16:37

புதுடெல்லி: தாமதத்தை தவிர்க்க, தேவைப்படும் நேரங்களில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் ரயில்களை டிரைவர்கள் இயக்கலாம் என ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.வெளியூர் செல்வதற்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஆனால், சரியான நேரத்தில் ரயில்கள் புறப்பட்டாலும், சென்றடையும் நேரத்தில் தாமதம் ஏற்பட்டு விடுகிறது. இந்த ஆண்டு 30 சதவீத ரயில்கள் தாமதமாகவே இயக்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு சில அசவுகரியத்தை ஏற்படுத்துவதுடன், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதிலும் நேரமின்மையை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிலவி வரும் நிலையில், ரயில்வே அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், தாமதத்தை தவிர்க்க, தேவைப்படும் நேரங்களில்  நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் ரயில்களை டிரைவர்கள் இயக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, சரியான நேரத்திற்கு வர வேண்டியிருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதனால், அதிகபட்ச  வேகத்தில் ரயில்களை இயக்குவது மிக அரிதாக மட்டுமே நடந்து வருகிறது. அதிக வேகத்தில் ரயிலை இயக்கினால், டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதே அதற்கு காரணம். தற்போது இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

ரயில்களின் புதிய நேர அட்டவணை நாளை மறுதினம் வெளியிடப்பட உள்ளது. அதில், அதிகபட்ச வேகம் 110 கி.மீ. ஆக உள்ள ரயில்களை 105 கி.மீ வேகத்திலும், 120 கி.மீ அதிகபட்ச வேகமுள்ள ரயில்களை 115 கி.மீ.  வேகத்திலும் இயக்கலாம். அதே நேரத்தில், முழு பயணத்தையும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் இயக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.தற்போது எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களின் அதிகபட்ச வேகம் 110 கி.மீ. ஆக இருந்தாலும் அவற்றின் சராசரி வேகம் 40 முதல் 50 கிமீ மட்டுமே. ராஜ்தானி போன்ற அதிவேக ரயில்கள் 130 கி.மீ வரை வேகமாக  செல்லலாம் என்றாலும் அவற்றின் சராசரி வேகம் 80 முதல் 90 கிமீ வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவர்கள் வரவேற்பு
ரயில்வேயின் முடிவு குறித்து இன்ஜின் டிரைவர்கள் கூறுகையில், ‘‘அதிகபட்ச வேகம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அபராதம் விதிக்கப்படுமோ என்ற பயத்திலேயே நாங்கள் மெதுவாகவே ரயில்களை இயக்குவோம். தற்போது 105  கி.மீ வேகம் வரை ரயில்களை இயக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், தாமதத்தை நிச்சயம் தவிர்க்க முடியும். எந்த நெருக்கடியும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் நாங்கள் ரயில்களை  இயக்குவோம்’’ என்றனர்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்