SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை ஒரு வீரர் பலி; 4 பேர் காயம்

2018-08-13@ 00:16:36

ஸ்ரீநகர்:  காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு வீரர் உயிரிழந்தார். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர். காஷ்மீரில் உள்ள பத்மாலு பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று காலை தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டனர்.  தியார்வானி பகுதியில் தேடுதல் பணியில் வீரர்கள் இருந்தபோது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதற்கு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். எனினும், தீவிரவாதிகளின் திடீர்  தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வீரர்கள் தாக்குதலில் தீவிரவாதிகள் காயமடைந்ததாகவும், எனினும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் கூறப்படுகின்றது. மேலும் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்