SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிர்வாக படிப்பு பட்டம் இல்லாவிட்டாலும் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் பெண்கள் சிறந்த நிர்வாகிகள்: சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாராட்டு

2018-08-13@ 00:16:35

சண்டிகர்: பாரத் விகாஸ் பரிஷத் என்ற அமைப்பின் சார்பில், பெண் தொழிலாளர்கள் மாநாடு, பஞ்சாப் மற்றும் அரியானா தலைநகர் சண்டிகரில் நேற்று நடத்தப்பட்டது. இதில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசியதாவது: வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிலும், வெளியேயும் இரு வேலைகள் பார்க்கிறார்கள் என சண்டிகர் எம்.பி கிரோன் சரியாக சொன்னார். நாங்களும் அப்படித்தான் என ஆண்கள் கூறினாலும், வீட்டு வேலை செய்வதை எந்த  ஆணும் பெருமையாக கூறுவதில்லை. நிர்வாக படிப்பு பட்டம் பெறாவிட்டாலும் பெண்கள் மிகச் சிறந்த நிர்வாகிகள். பெண்கள் சிறந்த நிர்வாகி என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால் இல்லத்தரசிகள், நாங்கள் எதுவும்  செய்யவில்லை என கூறுகிறார்கள். இல்லத்தரசி என்றால் வேலை இல்லாதவள் என பெண்கள் நினைக்கின்றனர். முதலில் அந்த எண்ணத்திலிருந்து பெண்கள் விடுபட வேண்டும். இல்லத்தரசிகள் அதிகம் பணியாற்றுகின்றனர்.

திருமணத்துக்குப்பின் ஒரு குடும்பத்தையே நிர்வகிக்கிறீர்கள். உங்கள் சொந்த குடும்பத்தைவிட்டு, புது குடும்பத்தில் இணைந்து அவர்களை உங்கள் குடும்ப உறுப்பினர்களாக நினைத்து பணியாற்றுகிறீர்கள். அவர்களின் பழக்க  வழக்கங்களுக்கு ஏற்ப நீங்கள் மாறிகொள்கிறீர்கள். புகுந்த வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கு தகுந்தபடி நீங்கள் அவர்களை கவனித்துக் கொள்கிறீர்கள். இதுதான் முழு நிர்வாகம். அவற்றை நீங்கள்தான் செய்கிறீர்கள் என்பதை  யாரையும் உணரச் செய்வதில்லை. சமூகத்தில் பெண்களும் ஒரு பகுதிதான். பல விஷயங்களில் நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். வீட்டில் தாய் புத்திசாலியாக இல்லையென்றால், அந்த குடும்பம் புத்திசாலியாக மாறாது. தங்கள் குழந்தைகளுக்கு  வழிகாட்டும் அளவுக்கு பெண்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த வேலையை தேர்வு செய்ய வேண்டும் என தாயிடம் குழந்தைகள் கேட்க வேண்டும். அவரைத்தான் வெற்றிகரமான தாய் என நான் கூறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

  • armyyyyyy122233

    கேரளாவில் கன மழைக்கு 167 பேர் பலி : மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்