SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாவூத் இப்ராஹிமிடம் இருந்து மிரட்டல் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ புகார்

2018-08-13@ 00:16:34

லக்னோ:  உத்தரப்பிரதேச மாநிலம், ராஸ்ரா தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் உமா சங்கர் சிங். இவர் நேற்று அளித்த பேட்டி:எனக்கு கடந்த 6ம் தேதி செல்போனில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. உடனடியாக என்னுடைய இமெயிலை பார்க்கும்படி குறிப்பிடப்பட்டு இருந்தது. நிறைய இளைஞர்கள் தங்களது சுயவிவர தகவலை எனக்கு அனுப்புவார்கள்.  எனவே நான் பின்னர் இமெயிலை படிக்கலாம் என விட்டுவிட்டேன். ஆனால் 8ம் தேதி அதே எண்ணில் இருந்து எனக்கு மீண்டும் செய்தி வந்தது.
“இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை” என்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. எனவே, எனது இமெயிலை சோதனை செய்தேன். அப்போது தாவூத் இப்ராஹீம் புகைப்படம் அனுப்பப்பட்டு இருந்தது.

நீ பாலியா மக்களுக்கு  சேவை செய்து வருகிறாய். நீ தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால் ரூ.1 கோடி தரவேண்டும். இல்லையென்றால் உனக்கு ஒரே ஒரு துப்பாக்கி குண்டு போதும். உன்னை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாங்கள்  கொன்றுவிடுவோம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. எனக்கு செய்தி அனுப்பப்பட்ட எண்ணை ‘ட்ரூ காலர்’ செயலி மூலம் சோதனை செய்தததில் அது தாவூத் இப்ராஹிம் குழுவுடையது என தெரியவந்தது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளேன் என்றார்.எம்எல்ஏ புகாரின்பேரில் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்