SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியளவில் நட்பில்லாத நாடுகளுடன் மாநில அரசுகள் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடாது: மத்திய அரசு எச்சரிக்கை

2018-08-13@ 00:16:32

புதுடெல்லி: பெரிய அளவில் நட்பில்லாத நாடுகளுடன் மாநிலங்கள் நேரடி தொடர்புக் கொள்வது உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மனிதக் கடத்தல், தீவிரவாத எதிர்ப்பு திட்டங்கள், போலி ரூபாய் நோட்டுகள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட  நாடுகளை பெரியளவில் நட்பில்லாத நாடுகளாக நாம் கருதுகிறோம். இந்த பட்டியல் காலத்திற்கேற்ப மாறுபடும்.இந்நிலையில், இந்தியாவுடன் பெரிய அளவில் நட்பில்லாத நாடுகளுடன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நேரடி தொடர்புக் கொள்ளக்கூடாது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில தலைமை செயலாளர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :இந்தியாவுடன் பெரியளவில் நட்பில்லாத நாடுகளில் உள்ள நிறுவனங்கள், நமது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிறுவனங்களுடன் பயிற்சிகள், கூட்டுப் பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அழைப்பு விடுத்து  வருவதாக உள்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரியாமல் இந்த அழைப்புகள் நேரடியாக விடுக்கப்படுகின்றன. இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளதால் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை பெறாமல்,  இத்தகைய அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்