SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

70 லட்சம் பேருக்கு மட்டுமே கடந்த ஆண்டில் வேலைவாய்ப்பு: உண்மையை ஒப்புக் கொண்டார் மோடி

2018-08-13@ 00:16:31

புதுடெல்லி: பிரதமர் மோடி ஆங்கில பத்திரிகை குழுமத்துக்கு அளித்துள்ள பேட்டி:வெவ்வேறான, நம்பிக்கையிழந்த, கொள்கையற்ற கட்சிகளின் கூட்டணி எல்லாம் ஒன்று சேர்வது, மெகா கூட்டணி அல்ல. இது அரசியல் புது முயற்சி. அந்த கூட்டணி வெற்றி பெறாது. அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை  தேர்தலில் மிக அதிக இடங்களில் வென்று ஆட்சிக்கு வருவோம்.பசு பாதுகாவலர்கள் உட்பட நாட்டில் நடந்த கூட்டு வன்முறை தாக்குதல் எல்லாம் மிகவும் கண்டிக்கத்தக்கது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வாழ்வையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.  யாரும் எந்த சூழ்நிலையிலும், சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக் கூடாது. பொருளாதார குற்றங்கள் புரிந்து நாட்டைவிட்டு தப்பியவர்களை தண்டிக்க எனது அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அவர்களின் சொத்துக்களை முடக்க சமீபத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் சிறந்த பலனை அளிக்கும்.  மக்கள் பணத்தை முறைகேடாக எடுத்துக் கொண்டு தப்பியவர்களை நாங்கள் விடமாட்டோம். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பொய் தகவல்களை காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. இது இரு அரசுகள் இடையே நடந்த  நேர்மையான, வெளிப்படையான ஒப்பந்தம். காங்கிரஸ் கூறுவது நாட்டின் நலனை பாதிக்கும் பிரசாரம்.

இந்த அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என காங்கிரஸ் கூறுகிறது. கடந்த செப்டம்பர் 2017 முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை 45 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். கடந்தாண்டில் 70 லட்சம்  வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் (இபிஎப்) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள்,  புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்கள், கட்டுமானங்கள் எல்லாம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி, கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது கூறி வந்தார். ஆனால், அது செயல்படுத்தப்படவே இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறிவரும்  நிலையில், இப்போது பிரதமரே, கடந்த ஆண்டில் 70 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்