SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் கன மழைக்கு ரூ.8,316 கோடி இழப்பு: முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு

2018-08-12@ 21:35:35

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, மலப்புரம் மாவட்டங்களில் ரூ.8,316 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதையடுத்து 440 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு 50 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் 33 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின. இந்த மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 3 தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 6 பேரை காணவில்லை.  இடுக்கி 3 பேரும், மலப்புரம், பாலக்காடு, ஆலப்புழாவில் தலா ஒருவரும் அடங்குவர். கன மழையால் வயநாடு, இடுக்கி, மலப்புரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன. ராணுவம், கடற்படை, விமான படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் வெள்ள பாதிப்புக்குள்ளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களை பார்வையிட முதல்வர் பினராய் விஜயன் நேற்று ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, வருவாய் துறை அமைச்சர் ஆகியோரும் சென்றனர். மோசமான வானிலை காரணமாக இடுக்கியில் ஹெலிகாப்டர் தரையிறக்க முடியவில்லை. இதையடுத்து ஹெலிகாப்டர் வயநாட்டுக்கு புறப்பட்டு சென்றது. தொடர்ந்து கல்பற்றாவிற்கு சென்ற அவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். இதையடுத்து அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: மழையால் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், வீடு இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சமும் வழங்கப்படும். வீடு, நிலங்களை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என்று கூறினார். இதன் பின்னர் கொச்சி சென்றார். அங்கு எர்ணாகுளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

இந்நிலையில் இன்று கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதலமைச்சர் பினராயி விஜயனுடன் விமானத்தில் சென்று பார்வையிட்டார். பின்னர் வெள்ளப் பாதிப்புக்கு உடனடி நிவாரணமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

வெள்ள அபாய எச்சரிக்கை

கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கன மழை நேற்று ஓய்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கும் எனறு வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி வரும் 14ம் தேதிவரை வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் மிக பலத்த மழையும், 15ம் தேதி பலத்த மழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா கண்ணூர் மாவட்டங்களில் 13ம் தேதிவரை மிக பலத்த மழையும், 15ம் தேதிவரை பலத்த மழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் 12ம் தேதிவரை பலத்த மழையும், 14ம் தேதி மிக பலத்த மையும் பெய்யும் என்று அறிவித்திருந்தது. இதனால் இந்த மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இரவு நேரங்களில் மலையோர பகுதிகளுக்கு யாரும் செல்வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இடுக்கியில் தொடர்ந்து 3வது நாளாக 5 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, மலப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 500 கி.மீ. தூரத்திற்கு சாலைகள் நாசமாகியுள்ளன. இடுக்கியில் மட்டுமே 250 கி.மீ.க்கு மேல் சாலைகள் உருக்குலைந்துள்ளன. 15 பாலங்கள் இடியும் அபாயத்தில் உள்ளன. 500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 440 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த கனமழை கேரளாவை புரட்டிப் போட்டுவிட்டது என்றே கூறவேண்டும்.

ரெட் அலர்ட்

கனமழையை தொடர்ந்து இடுக்கி, வயநாடு, பாலக்காடு, எர்ணாகுளம் உள்பட 7 மாவட்டங்களில் ‘ரெட் அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 1 வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கேரளாவில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதுவரை 24 அணைகள் அடுத்தடுத்து திறக்கப்பட்டுள்ளன. கேரள வரலாற்றில் இதற்கு முன் 24 அணைகள் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு

இந்நிலையில் கேரளா வெள்ளப் பாதிப்புக்கு உடனடி நிவாரணமாக மத்திய அரசு 100 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. வெள்ளப் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்ய கால தாமதம் ஆகும் என்பதால் தற்போது உடனடி நிவாரணமாக 100 கோடி வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்