SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

திருவனந்தபுரம் - மங்களூர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

2018-08-12@ 21:23:15

நாகர்கோவில்: திருவனந்தபுரம் - மங்களூர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கல்வி,  மருத்துவம், வியாபாரம் மற்றும் தொழில் நிமித்தமாகவும், சுற்றுலாவுக்காக தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகிறார்கள். நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மொத்தம் 5 தினசரி ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் அதிகாலையில் செல்லும் இரண்டு ரயில்களில் பயணம் செய்தால் மட்டுமே முழு கேரளாவுக்கும் பயணிக்க முடியும். இந்த ரயில்களை விட்டால் அடுத்த ரயிலாக காலையில் 7 மணிக்கு கன்னியாகுமரி - மும்பை ரயிலும், அடுத்து காலை 10.30 மணிக்கு கன்னியாகுமரி - பெங்களுர் ரயில் ஆகும். காலை 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயிலை விட்டால் 11 மணி நேரங்கள் கழித்து தினசரி ரயிலாக இரவு சென்னை - குருவாயூர் ரயில் மட்டுமே உள்ளது. இந்த மூன்று ரயில்களும் திருச்சூர் பாலக்காடு வரை மட்டுமே செல்லும். காலை 10.30 முதல் இரவு 9.40 வரை சுமார் 11 மணி நேரம் கேரளாவுக்கு செல்ல எந்த ஒரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் குமரி மாவட்டத்தில் இருந்து கிடையாது. பொதுவாக இரவு நேர ரயில்கள் என்று இயக்கப்படும் ரயில்கள் எல்லாம் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை ஒரு நகரத்திலிருந்து புறப்படுமாறு இயக்கப்படும். ஆனால் கேரளாவுக்கு இரவு நேர ரயில்கள் என்று சொல்ல ஒரு ரயில் கூட இதுவரை குமரி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படவில்லை.

குமரி மாவட்ட பயணிகள் மங்களூர் மற்றும் வட கேரளா பகுதிகளுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளோ, அரசு பேருந்து வசதியோ, விமான வசதியோ கிடையாது. இங்கு உள்ள பயணிகளுக்கு ரயில் வசதி மட்டுமே உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு செல்ல மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பயணிகள் தற்போது பேருந்துகளில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து புறப்படும் இந்த மூன்று ரயில்களிலும் வட கேரளா மற்றும் மங்களூருக்கு பயணிக்கின்றனர். இவ்வாறு குமரி மாவட்ட பயணிகள் நேரடி ரயில் வசதி இல்லாத காரணத்தால் கடும் சிரமம் அடைகிறார்கள். எனவே திருவனந்தபுரம் - மங்களூர் ரயில்களில் ஒரு ரயிலை கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்தால், குமரி மாவட்ட மக்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்று குமரி  மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு தற்போது மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் இயங்கி வரும் நிலையில் நான்காவது ரயிலாக கொச்சுவேலியில் இருந்து மங்களூருக்கு புதிய அந்தியோதியா ரயில் அறிவிக்கப்பட உள்ளது. குமரி மாவட்ட பயணிகள் வசதிக்காக மங்களூருக்கு தினசரி ரயில் இயக்க திருவந்தபுரத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் ஒரு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் அல்லது புதிய ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு இந்த ரயிலை நீட்டித்து இயக்க முடியாத நிலை இருந்தால் கன்னியாகுமரியில் இருந்து மங்களூருக்கு புதிய தினசரி ரயில் அறிவித்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்