SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் ‘கோ-பேக்’ கோஷம்: எதிர்ப்புகளை வெளிப்படுத்த புதிய அணுகுமுறை

2018-08-12@ 21:18:20

புதுடெல்லி: சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக ‘கோ-பேக்’ கோஷம் பிரபலமான நிலையில், தற்போது நாடு முழுவதும் ஆட்சியாளர்களுக்கு எதிராக, புதிய அணுகுமுறையாக அதே கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, எதிர்க்கட்சிகள் அவருக்கு கறுப்பு கொடி காட்டியதை அடுத்து, ‘கோ-பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் கோஷம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. அதேபோல், பாஜ தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வந்தபோது, ‘கோ-பேக் அமித்ஷா’ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. ஆட்சியாளர்களுக்கு எதிராக ‘கோ - பேக்’ கோஷம் தற்போது பிரபலமாகி வருவதால், அவை ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தை குறிவைத்துள்ள பாஜ தலைவர் அமித் ஷா, அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு எதிராக, பல்வேறு போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி வருகிறார். நேற்று, கொல்கத்தாவிற்கு அமித் ஷா சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஆனால், அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. ‘அமித் ஷா வெளியேறு (கோ-பேக்)’ என்ற முழக்கத்துடன், அவர்களும் போட்டிக்கு பேனர்களும், விளம்பரங்களும் வைத்தனர். இருகட்சித் தொண்டர்களும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டதால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அசாம் என்ஆர்சி விவகாரத்தில், மம்தா பானர்ஜி எடுத்துள்ள நிலைப்பாட்டில், பாஜ - திரிணாமுல் கட்சிகளுக்கிடையே மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அதேபோல், ராஜஸ்தான் மாநில பாஜ முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு எதிராக, அவர்களது கட்சியைச் சேர்ந்த பிரமோத் ஷர்மா என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஜாலாவார் பகுதியில் பைக் பேரணி ஒன்றை நடத்தினார். ஜாலாவார் தொகுதி, வசுந்தரா ராஜே வென்ற தொகுதியாகும். பேரணியில், ‘வசுந்தரா, திரும்பிச் செல்லுங்கள்’, ‘வசுந்தரா, ஜாலாவாரேவை விட்டுப் போ’ என்ற கோஷங்களுடன் பேரணி நடந்தது. இவர்கள், ‘ஜாலாவார் தொகுதியில், 3 முறை தேர்வு செய்யப்பட்ட வசுந்தரா ராஜே, தொகுதியின் சாதாரண மனிதருக்கு கூட எதுவும் செய்யவில்லை’ என்று குற்றம்சாட்டினர். இருப்பினும், பாஜ எம்எல்ஏ கன்ஷியம் திவாரி ஆதரவாளர்களால் வசுந்தரா ராஜேவுக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டதாக முதல்வர் ஆதரவாளர்கள்  தெரிவிக்கின்றனர். சொந்த கட்சியினரே பேரணி நடத்தி அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதையடுத்து, வருகிற டிசம்பர் வாக்கில் ராஜஸ்தானில் நடக்கும் சட்டசபை தேர்தலில், பாஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்