SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

காதலிக்காவிட்டால் கொலை செய்வேன் : பேஸ்புக் நண்பர் மிரட்டல் இன்ஜி. மாணவி தீக்குளிப்பு

2018-08-12@ 20:35:53

திருச்சி: திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்த 19 வயது பெண், தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அரியமங்கலம் பர்மா காலனியை சேர்ந்த வினோத்குமார் மகன் விஷால்(19). இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாகினர். இந்நிலையில் தோழி மீது, விஷாலுக்கு காதல் ஏற்பட்டது. அதை அவர் வெளிப்படுத்தினார். ஆனால் காதலை ஏற்க, தோழி மறுத்து விட்டார். ஆனாலும் காதலை ஏற்கும்படி விஷால் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் காதலை ஏற்காவிட்டால், கொலை செய்து விடுவேன் என விஷால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான தோழி நேற்று வீட்டில் இருந்த போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து விஷாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்