SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவின் வெள்ளப் பாதிப்புக்கு உடனடி நிவாரணமாக ரூ.100 கோடி வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு

2018-08-12@ 20:13:33

திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதலமைச்சர் பினராயி விஜயனுடன் விமானத்தில் சென்று பார்வையிட்டார். பின்னர் வெள்ளப் பாதிப்புக்கு உடனடி நிவாரணமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தில், ராணுவத்தினர் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். வெள்ளத்திற்கு இதுவரை 33 பேர் பலியாகி இருப்பதாகவும், 6 பேர் காணாமல் போயிருப்பதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் கேரளா வெள்ளப் பாதிப்புக்கு உடனடி நிவாரணமாக மத்திய அரசு 100 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. வெள்ளப் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்ய கால தாமதம் ஆகும் என்பதால் தற்போது உடனடி நிவாரணமாக 100 கோடி வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்