SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையில் காதலன் ரயிலில் பாய்ந்து தற்கொலை: காதலியும் விஷம் குடித்து சாவு

2018-08-12@ 19:18:53

நாங்குநேரி: மூன்றடைப்பு அருகே காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார் .துக்கம் தாங்காமல் காதலியும் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே பனையன்குளத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ரத்தினகுமார்(20), பாலிடெக்னிக் மாணவர். மூலைக்கரைப்பட்டி அருகே தெய்வ நாயகப்பேரியை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி மகள் சுதா(20). நெல்லை பேட்டையில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் கல்லூரிக்கு பஸ்சில் செல்லும்போது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே சுதாவுக்கு அவரது பெற்றோர் வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரத்தினகுமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் கடந்த 10ம்தேதி நாங்குநேரி அருகே செங்குளம் ரயில் நிலையம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் காதலன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அறிந்து சுதா அதிர்ச்சி அடைந்தார். மேலும் காதலன் வீட்டிற்கு சென்று அவரது இறுதி சடங்கில் பங்கேற்று கதறி அழுதார். ரத்தினகுமாரின் உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மன வேதனையால் துடித்த சுதா, நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து நாங்குநேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

  • armyyyyyy122233

    கேரளாவில் கன மழைக்கு 167 பேர் பலி : மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்