SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மரண பள்ளங்கள்

2018-08-12@ 19:12:41

திங்கள்சந்தை: நாகர்கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பகுதியாக சுங்கான்கடை விளங்கி வருகிறது. நாகர்கோவில் பார்வதிபுரத்துக்கு அடுத்த முக்கிய சந்திப்பு பகுதியாகவும் உள்ளது. இங்கு 4 கல்லூரிகள், ஓட்டல்கள், கிரானைட் விற்பனை நிலையங்கள் உட்பட வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் இந்த சாலை வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. இந்த சாலையில் பிரபல தனியார் உணவகம் எதிரில் ஒரு மரண பள்ளம் உள்ளது. நெடுஞ்சாலையாக விளங்கியபோதும், தினமும் பல அதிகாரிகள் இந்த சாலை வழியாக கடந்து சென்ற பிறகும் இந்த மரண குழியை செப்பனிட யாரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் தினம்தினம் இந்த பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்பட்டு வருகிறது.

கடந்த 4 தினங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேகமாக வந்த கேரள அரசு பஸ் இந்த பள்ளத்தில் விழுந்து எழுந்ததில், பஸ்சின் பின்புறம் இருந்த 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதுபோல நேற்று பள்ளத்தில் சிக்கிய கார் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அரசு பஸ்சுடன் ஒரு கார் மோதியது. கோழிகள் ஏற்றிவந்த ஒரு டெம்போவும் மரண குழியில் சிக்கியது. இன்று காலையிலும் ேகரள அரசு பஸ் ஒன்று பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டது. இதுபோன்று தொடரும் விபத்துக்களால் இப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த பள்ளத்தால் உயிர் பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்களை ஏற்படுத்தி வரும் மரண பள்ளத்தை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் நலன்காக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. அதிகாரிகள் விழித்துக்கொள்வார்களா?

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்