SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பக்தர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து ராமேஸ்வரம் கோயிலில் நீதிபதிகள் குழு ஆய்வு

2018-08-12@ 18:29:14

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில், அக்னி தீர்த்த கடற்கரையில் மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமையிலான நீதிபதிகள் பக்தர்களிடம் பெறப்படும் பல்வேறு கட்டணம் குறித்து விசாரித்து ஆய்வு செய்தனர். திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனடிப்படையில் தமிழக முக்கிய கோயில்களில், பக்தர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து, மாவட்ட நீதிபதிகள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி தலைமையில் இலவச சட்ட உதவி சார்பு நீதிபதி ராமலிங்கம், ராமேஸ்வரம் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி உள்ளிட்ட குழுவினர் நேற்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பூஜை கட்டண பட்டியல், அங்கு மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகளை பார்வையிட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள், புரோகிதர்களிடம் முதலில் விசாரணை செய்தனர். அப்போது, ‘‘பூஜைக்குரிய கட்டணத்தை யார் நிர்ணயம் செய்தது? கட்டண விபர பலகையை யார் வைத்தது? கடற்கரையில் கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் உள்ளன. யாருக்கு கமிஷன் கொடுக்கிறீர்கள்’’ என சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.

இதற்கு புரோகிதர்கள், ‘‘தாசில்தார், எஸ்பி மற்றும் புரோகிதர்களால் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. கூடுதல் கட்டணம் பெறவில்லை’’ என்றனர்.
தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற நீதிபதிகள், தீர்த்தம் குளிக்க டிக்கெட் கொடுக்கும் கவுன்டருக்குள் சென்று ஆய்வு செய்தனர். பணியில் இருந்த ஊழியரிடம் டிக்கட் கொடுக்கும் நடைமுறைகளை கேட்டறிந்தனர். பின் பேஷ்கார் அலுவலகத்தில் அர்ச்சனை, தரிசனம், பூஜை கட்டணம் குறித்து ஆய்வு செய்தனர். பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையையும் சோதனை செய்து பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். முதன்மை நீதிபதி கயல்விழி கூறுகையில், ‘‘ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி அக்னிதீர்த்த கடற்கரை, கோயிலில் ஆய்வு செய்யப்பட்டது. செப்.30ல் ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

  • armyyyyyy122233

    கேரளாவில் கன மழைக்கு 167 பேர் பலி : மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்