SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் பிரபல ரவுடிகள் 2 பேர் துப்பாக்கிமுனையில் போலீசாரால் கைது

2018-08-12@ 17:53:53

சென்னை: சென்னையில் காக்கா தோப்பு பாலாஜி உள்ளிட்ட பிரபல ரவுடிகள் 2 பேரை போலீசார் துப்பாக்கிமுனையில் கைது செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு, சூளை அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜங்கிலி கணேஷ் என்பவர் மீது, 4 கொலை, 10 கொலைமுயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவன் 9 முறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளான்.புளியந்தோப்பு பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் ஜங்கிலி கணேஷ் மாமூல் கேட்டு மிரட்டுவதாக ஏராளமான புகார்களும் எழுந்தன. 2013 -ஆம் ஆண்டு புளியந்தோப்பில் விஜய் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜங்கிலி கணேஷைக் கொல்ல, விஜய்யின் கூட்டாளிகள் திட்டம் தீட்டி வந்துள்ளனர். இதையறிந்த ஜங்கிலி கணேஷ், அவர்களை கொல்ல நேற்றிரவு ஆயுதங்களுடன் டி.பி. சத்திரத்தை சேர்ந்த கூட்டாளி சந்தோஷ் ராஜாவுடன் புளியந்தோப்புக்கு வந்துள்ளான்.

இதையறிந்த புளியந்தோப்பு போலீசார் ஜங்கிலி கணேசை மடக்கி பிடித்து கைது செய்தனர். கூட்டாளி சந்தோஷ் ராஜா தலைமறைவானான். இதேபோல, பாரிமுனை முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லையில், பிரபல கூலிப்படை தலைவன் காக்கா தோப்பு பாலாஜியையும் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். இவன் மீது 7 கொலை வழக்குகள் உட்பட 56 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாமினில் வெளிவந்த காக்கா தோப்பு பாலாஜி, பல்வேறு வழக்குகளில் ஆஜராகாததால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். சென்னையில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளிகள் இருவர், நேற்று ஒரே இரவில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

  • armyyyyyy122233

    கேரளாவில் கன மழைக்கு 167 பேர் பலி : மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்