SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் மூவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி கைது

2018-08-12@ 17:39:30

புதுச்சேரி: புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் மூவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான மணிகண்டனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் 2017அக்டோபர் 19ஆம் நாள் சதீஷ்,  நாய் சேகர், ஜெரால்டு, புளியங்கொட்டை ரங்கராஜ் ஆகியோரை ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசி ஓடஓட விரட்டி வெட்டியது. இதில் நாய்சேகர், சதீஷ், ஜெரால்டு ஆகியோர் உயிரிழந்தனர். புளியங்கொட்டை ரங்கராஜ் மட்டும் படுகாயங்களுடன் தப்பினார்.

அவர் கொடுத்த தகவலின் படி காவல்துறையினர் வினோத்,நந்தகுமார், சின்னத்துரை ஆகியோரைக் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளியான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன், அந்தோணி, கன்னுகுட்டி கணேஷ் ஆகியோர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் 10 மாதங்களாகத் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி மணிகண்டனை எஸ்பி ரட்சணா சிங் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

  • armyyyyyy122233

    கேரளாவில் கன மழைக்கு 167 பேர் பலி : மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்