SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் வி.எஸ்.நைபவுல் காலமானார்

2018-08-12@ 09:48:26

லண்டன்:  2001-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் வி.எஸ்.நைபவுல் நேற்று காலமானார். அவருக்கு வயது 85.  கரீபியன் தீவுகளில் ஒன்றான டிரினிடாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்த வி.எஸ் நைபவுலின் முழுப்பெயர் 'சர் விதியாதர் சுராஜ்பிரசாத் நைபால்' என்பதாகும். இவரது தந்தை சீபிரசாத் நைபாலின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்கள் ஆவர்.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துள்ள நைபவுல், 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1971-ம் ஆண்டு ‘இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்கான அவருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு ‘ஏ ஹவுஸ் பார் மிஸ்டர். பிஸ்வாஸ்’ என்ற புத்தகத்துக்காக அந்தாண்டு நோபல் பரிசு நைபவுலுக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து கரீபியன் நாட்டில் குடியேறிவர்களை பற்றி இந்த புத்தகம் பேசியது. இந்நிலையில், 85 வயதான அவர் லண்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். நைபவுலின் மறைவுக்கு சர்வதேச அளவிலான பல எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்