SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணிமுத்தாறு மலையில் வைரக்கல் எடுக்க குழி தோண்டிய கும்பல் : வனத்துறையிடம் சிக்கிய 5 பேர்

2018-08-12@ 02:47:04

அம்பை : மணிமுத்தாறு மலையில் வைரக்கல் எடுக்க குழி தோண்டிய கேரள வாலிபர்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை புலிகள் காப்பக பகுதிகளான களக்காடு, மணிமுத்தாறு வனப்பகுதியில் அபூர்வ வைர, வைடூரிய கற்கள் மற்றும் கனிமப் பொருட்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மலைப்பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசையையொட்டி கடந்த ஒரு வாரமாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள், உயர் அலுவலர்கள் வனப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் பிற வனப்பகுதிகளை பாதுகாக்க சிறப்பு குழுவினர் தீவிர ரோந்து பணியில் உள்ளனர்.

நேற்று அம்பை சரகம் சிங்கம்பட்டி 2ம் நம்பர் பீட் எலுமிச்சை ஆறு அருகே உள்ள ஒத்தப்பனை வனப்பகுதியில் சிறப்பு குழுவினர் ரோந்து சென்றபோது குழி தோண்டும் சப்தம் கேட்டு அப்பகுதிக்கு விரைந்தனர். அவர்களை கண்டதும் ஒருவர் தப்பியோட, மற்ற 5 பேரை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்கள் அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் (69),  ராஜா (37), கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிஜூவ்(37), ஆலப்புழா  சந்திரதாசன்(49), கொல்லம் அபிராஜ் (26) என்பதும், இவர்கள் வைரக்கல் எடுக்க குழி தோண்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த வனத்துறையினர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்