SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எள் வரத்து குறைவு நல்லெண்ணெய் விலை உயர்வு : பாமாயில் சரிவு

2018-08-12@ 02:39:39

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் நிலக்கடலை பருப்பு மற்றும் எள் வரத்து குறைவால் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பாமாயில் விலை குறைந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் நிலக்கடலை பருப்பு நடப்பு வாரத்தில்  மூட்டைக்கு ரூ100 விலை உயர்ந்துள்ளது. இதனால் கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ25, கடலைப்பிண்ணாக்கு (100 கிலோ) மூட்டைக்கு ரூ200 விலை உயர்ந்துள்ளது. எள் வரத்து இல்லாததால் நல்லெண்ணெய் விலை டின்னுக்கு ரூ80 உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ரூ.4,800க்கு விற்ற நிலக்கடலை பருப்பு (80 கிலோ) மூட்டை, இந்த வாரம்  ரூ4,900க்கு விற்பனையானது. இதேபோல கடந்த வாரம் ரூ1,925க்கு விற்ற கடலை எண்ணெய் டின் (15 கிலோ) ரூ1,950க்கும்,  ரூ3,100க்கு விற்ற கடலைப்பிண்ணாக்கு மூட்டை ரூ3,300க்கும், ரூ3,220க்கு விற்ற நல்லெண்ணெய் டின் ரூ3,300க்கும் விற்பனையானது. ரூ1,090க்கு விற்ற பாமாயில் டின் ரூ1,080க்கு விற்பனையானது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்