SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணல் தொழில் தொடர்ந்து பாதிப்பு 4,000 லாரிகளை விற்க முடிவு : வாங்க ஆளில்லாததால் உரிமையாளர்கள் தவிப்பு

2018-08-12@ 02:38:51

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மணல் லாரிகளுக்கு தொழில் பாதிப்படைந்துள்ளதால் தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் 500 லாரிகள் ஜப்திக்கு ஆளாகியுள்ளன. மேலும் ஜப்திக்கு ஆளாவதை தடுக்க 4 ஆயிரம் லாரிகளை விற்று கடனை அடைக்க உரிமையாளர்கள் முன் வந்தாலும், வாங்க ஆளில்லாததால் தவிப்படைந்துள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க  செயலாளர் சந்திரிகாமணி, அமைப்பாளர் மணி, திருப்பூர் தலைவர் ஆறுமுகம்  ஆகியோர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மணல் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகத்தில் 5 ஆயிரம் லாரிகள் பதிவு பெற்றுள்ளன. இவற்றில் 4,500 லாரிகள் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று வாங்கியவையாகும். இவற்றிற்கு மாதம் சராசரியாக ரூ.12 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.1.44 லட்சம் செலுத்த வேண்டும்.

இது தவிர ஒவ்வொரு லாரியும் அரசிற்கு இன்சூரன்ஸ் கட்டணமாக ஆண்டிற்கு ரூ.60 ஆயிரமும், சாலை வரியாக ரூ.20 ஆயிரமும், பதிவு புதுப்பிக்கும் செலவிற்கு ரூ.60 ஆயிரமும், பராமரிப்பு செலவுகளுக்கு ஆண்டிற்கு ரூ.1.20 ஆயிரம், டிரைவர் மற்றும் கிளீனர் சம்பளம் ஆண்டிற்கு ரூ.3.60 லட்சம் என ஆண்டிற்கு ரூ.7.64 லட்சம் தேவைப்படுகிறது. மாதத்திற்கு சராசரியாக ரூ.64 ஆயிரம் கட்டாய செலவாகிறது. லாரி ஓடினாலும், ஓடாவிட்டாலும் தினசரி ரூ.2,100 தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் ஒரு லாரிக்கு 10 நாளுக்கு ஒரு லோடு என மாறியது, பின்னர் படிப்படியாக 20 நாளுக்கு ஒரு லோடு, 30 நாளுக்கு ஒரு லோடு இடைவெளி அதிகரித்து, இந்த ஆண்டு சராசரியாக 40 நாளுக்கு ஒரு லோடு மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால் லாரிகளின் மாதாந்திர செலவிற்கு உரிய வருவாய் இல்லாமல், கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக லாரி உரிமையாளர்கள் நஷ்டப்பட்டுள்ளனர்.

வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு மாதம்தோறும் செலுத்த வேண்டிய கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல், கோவை மாவட்டத்தில் மட்டும் 500க்கு மேற்பட்ட லாரிகள் ஜப்திக்கு ஆளாகியுள்ளன. இதே நிலை நீடித்தால் இதர 4 ஆயிரம் லாரிகளும் வரும் மாதங்களில் தொடர்ந்து ஜப்திக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்ப்பதற்காக உரிமையாளர்கள் தங்களது லாரிகளை விற்று கடனை அடைத்து நிம்மதியாக இருக்க கடந்த சில மாதங்களாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அவற்றை வாங்குவதற்கு ஆளில்லாததால் தவிப்படைந்துள்ளனர் என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்