SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாட்ரிக் + அதிரடி சதம் ரஸ்ஸல் அமர்க்களம்

2018-08-12@ 02:34:46

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில், ஜமைக்கா தல்லவாஸ் அணிக்காக களமிறங்கிய ஆந்த்ரே ரஸ்ஸல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதுடன், 40 பந்தில் சதம் விளாசினார். குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - ஜமைக்கா தல்லவாஸ் அணிகள் மோதின. டாசில் வென்ற ஜமைக்கா பந்துவீச, டிரின்பாகோ 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன் குவித்தது. கிறிஸ் லின் 46, கோலின் மன்றோ 61, மெக்கல்லம் 56, பிராவோ 29 ரன் விளாசினர். ரஸ்ஸல் வீசிய கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய ஜமைக்கா 41 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கென்னர் லூயிஸ் - ஆந்த்ரே ரஸ்ஸல் ஜோடி அதிரடியாக விளையாடி 161 ரன் சேர்த்தது. லூயிஸ் 51 ரன் எடுத்து வெளியேறினார். ஜமைக்கா அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்து வென்றது. ரஸ்ஸல் 121 ரன் (49 பந்து, 6 பவுண்டரி, 13 சிக்சர்), இமத் வாசிம் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹாட்ரிக் மற்றும் சதம் விளாசிய ரஸ்ஸல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜமைக்கா அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்