SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

டிஎன்பிஎல் சீசன்-3 இறுதிப் போட்டி திண்டுக்கல் - மதுரை அணிகள் சேப்பாக்கத்தில் இன்று மோதல் : இரவு 7.15க்கு தொடங்குகிறது

2018-08-12@ 02:33:48

சென்னை: டிஎன்பிஎல்  டி20 தொடரின் 3வது சீசன் இறுதிப்போட்டியில் முதல் முறையாக திண்டுக்கல் - மதுரை  அணிகள் களம் காண்கின்றன. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.15க்கு தொடங்குகிறது. தமிழ்நாடு பிரிமீயர்  லீக் டி20 போட்டித் தொடர் 2016ம்  ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சீசன் பைனலில் தூத்துக்குடி பேட்ரியாட் - சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்  அணிகள் மோதின. அதில் தூத்துக்குடி அணி வென்று சாம்பியனானது. கடந்த ஆண்டு நடந்த 2வது சீசனின் பைனலில்  மீண்டும் சூப்பர் கில்லீஸ் - தூத்துக்குடி  அணிகள் மோதியதில், சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஜூலை 14ல் தொடங்கிய நடப்பு சீசனில்  திண்டுக்கல் டிராகன்ஸ்,  கோவை கிங்ஸ், காரைக்குடி காளைஸ், காஞ்சி வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ்,  தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ்  என 8 அணிகள் களம் கண்டன. லீக் சுற்றின் முடிவில் 4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பேந்தர்ஸ்,  காரைக்குடி காளை,  கோவை கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. கடந்த  2 சீசனிலும் இறுதிப் போட்டியில் விளையாடிய தூத்துக்குடி, சேப்பாக்கம் அணிகள்  இம்முறை லீக் சுற்றுடன் வெளியேறின. அதிலும்  சேப்பாக்கம் அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது  குறிப்பிடத்தக்கது.

முதல் 2 இடங்களை பிடித்த  திண்டுக்கல் - மதுரை  அணிகள் மோதிய குவாலிபயர்-1 போட்டியில், 75 ரன்  வித்தியாசத்தில் வென்ற திண்டுக்கல் நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. 3வது, 4வது இடங்களை பிடித்த  காரைக்குடி - கோவை  அணிகள் வெளியேற்றும் சுற்றில் மோதின.
அதில் 24 ரன் வித்தியாசத்தில்   வென்ற கோவை அணி குவாலிபயர்-2ல் மதுரை அணியுடன்  மோதியது. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில்  வென்ற மதுரை அணி  இறுதிப் போட்டியில்  திண்டுக்கல் அணியை இன்று சந்திக்கிறது. முதல் முறையாக பைனலில் மோதும் இந்த அணிகளிடையே
இதுவரை நடந்துள்ள 4 போட்டியிலும் (கடந்த 2 சீசன்களில் தலா ஒன்று, இந்த  சீசனில் லீக்போட்டி, முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டி)  திண்டுக்கல் அணி வென்று ஆதிக்கம் செலுத்தி உள்ளது. மதுரை அணி முதல் 2 சீசனிலும்  தொடர்ந்து 14  தோல்விகளை சந்தித்த நிலையில், அதில் இருந்து மீண்டு இந்த  சீசனில் வெற்றிகளைக் குவித்து பைனலுக்கு முன்னேறி உள்ளது.

அந்த அணியின் அருண் கார்த்திக்  4 அரை சதம் உட்பட  மொத்தம் 397 ரன் (சராசரி: 66.17) குவித்துள்ளார். அவருக்கு அடுத்து தலைவன் சற்குணம் 191 ரன் எடுத்துள்ளார். பைனலில் கார்த்திக், சற்குணம்,  கேப்டன் ரோகித், வருண்,  அபிஷேக், ராஹில், கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பாக விளையாடினால்  திண்டுக்கல்லுக்கு நெருக்கடி கொடுக்கலாம். எனினும், மதுரையுடன் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்றுள்ளதால் திண்டுக்கல் வீரர்கள் உற்சாகமாக உள்ளனர். லீக் சுற்றில் முதலிடம் பிடித்தது, குவாலிபயர்-1ல் வென்று  நேரடியாக பைனலுக்கு முன்னேறியதும் அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. கேப்டன் ஜெகதீசன் இந்த சீசனில் 345 ரன் குவித்துள்ளார் (சராசரி:  69.00). மோகன்  அபினவ், விவேக், ஹரி நிஷாந்த், முகம்மது,  சதுர்வேத், சிலம்பரசன், யாழ்  அருண்மொழி ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இரு அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால், இன்றைய பைனல் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என நம்பலாம்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்