SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிறுத்தி வைத்திருந்தபோது விபரீதம் அமெரிக்காவில் விமானத்தை திருடி சென்ற மெக்கானிக் : நடுவானில் வெடித்து சிதறியதால் பரபரப்பு

2018-08-12@ 02:28:31

சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து மெக்கானிக் ஒருவர் திருடி சென்ற விமானம், கட்டுப்பாட்டை இழந்து நடுவானில் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள தாகோமா சர்வதேச விமான நிலையத்தில் வேலை செய்து வந்த விமான நிலைய மெக்கானிக் ஒருவர், அலாஸ்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றை நேற்று திருடி செல்லும் நோக்கத்துடன் ஓட்டி சென்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான நிலைய ஊழியர்கள், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, இரண்டு ராணுவ விமானங்கள் அந்த விமானத்தை துரத்தி சென்றன. விமானத்தை திருடி சென்ற அந்த மெக்கானிக், விமானத்தை ஓட்டிய முன் அனுபவம் இல்லாததால், வானில் விமானத்தை தாறுமாறாக ஓட்டினார். இதையடுத்து, அந்த விமானம் புறப்பட்ட ஒன்றரை மணி நேரங்கள் கழித்து  வெடித்து சிதறியது.

விமானத்தின் பாகங்கள் அங்கிருந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் விழுந்தன.நடுவானில் தீப்பிடித்து விமானம் எரிந்ததை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். விமானத்தை ஓட்டி சென்ற மெக்கானிக்கும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமானத்தின் ஊழியர்கள் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ராணுவ விமானங்கள் துரத்தி சென்றதால் விமானம் வெடித்து சிதறவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, இது தீவிரவாதிகளின் செயல் இல்லை என்று பியர்ஸ் மாகாண ஷெரிப் எட் டிரோயர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘இது கண்டிப்பாக தீவிரவாதிகளின் செயல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டி சென்றவர் யார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற யாரும் இந்த செயலில் சம்பந்தப்படவில்லை. இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

‘அப்படி செய்ய முடியாது’
விமானத்தை ஓட்டிச் சென்றவர் பெயர் ‘ரிச்’ என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் மிகவும் சந்தோஷமான, அதே நேரம் குழப்பமான மனநிலையில் இருந்தது கட்டுப்பாட்டு அறையுடன் அவர் செய்த உரையாடல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. விமானத்தை தரையிறக்கும்படி அவருக்கு கட்டுபாட்டு அறை அதிகாரிகள் உத்தரவிட்டபோது, ‘அப்படி செய்ய முடியாது’ என்று அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்