SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிளீவ்லேண்ட் பைக் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது

2018-08-12@ 00:31:42

அமெரிக்காவை சேர்ந்த கிளீவ்லேண்ட் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் கிளீவ்லேண்ட் நிறுவனம் இந்தியாவுக்கான  மோட்டார் சைக்கிள் மாடல்களை காட்சிக்கு வைத்திருந்தது. ஏஸ் வரிசையில், ஏஸ் டீலக்ஸ், ஏஸ் ஸ்க்ராம்ப்ளர் மற்றும் ஏஸ் கபே 250 ஆகிய மூன்று மாடல்களை காட்சிக்கு வைத்திருந்தது. இந்த மோட்டார் சைக்கிள்களில் 229 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், 15.4 எச்பி பவரையும், 16 என்எம் டார்க் திறனையும் அளிக்கவல்லது. இந்த பைக்குகளில் முன்புறத்தில் 298 மி.மீ டிஸ்க்  பிரே, பின்சக்கரத்தில் 210 மி.மீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று மாடல்களிலுமே இன்ஜின் உள்ளிட்ட முக்கிய உதிரிபாகங்கள் ஒன்றுதான். டிசைனில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த லெய்ஸ் மேடிசன் மோட்டார் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் கால் பதிக்க இருப்பதாக கிளீவ்லேண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வர்த்தக விவகாரங்களை லெய்ஸ் மேடிசன் மோட்டார் ஒர்க்ஸ் நிறுவனம் கையாள இருப்பதாகவும் அறிவித்துள்ளது. புனே நகரில் தனது மோட்டார் சைக்கிள் உற்பத்தி ஆலையையும் அமைத்துள்ளது.

இந்த ஆலையில் முதல் மாடலாக, மிஸ்பிட் மோட்டார் சைக்கிளின் உற்பத்தி துவங்கி இருக்கிறது. அடுத்து ஏஸ் வரிசை மாடல்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. சீனாவில் இருந்து மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களை  இறக்குமதி செய்து இந்த ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்திய வாகன சந்தையில் கிளீவ்லேண்ட் பைக் களம் இறங்க உள்ளது. ஹார்லி டேவிட்சன், இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் வரிசையில் மேலும் ஒரு அமெரிக்க நிறுவனம் இந்தியாவில்  கால் பதித்துள்ளது. இப்புதிய பைக்குகளின் விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்