SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஹிந்திராவின் புதிய 7 சீட்டர் கார் அறிமுகம்

2018-08-12@ 00:31:41

டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா காருக்கு போட்டியாக புதிய 7 சீட்டர் எம்பிவி ரக காரை மஹிந்திரா விரைவில் களமிறக்குகிறது. தற்போது இந்த கார், U321 என்ற குறியீட்டு பெயரில், சாலை சோதனைகளுக்கு  உட்படுத்தப்பட்டு, இறுதிக்கட்ட ஆய்வு நடந்துவருகிறது. மஹிந்திராவின் இப்புதிய கார், மரஸ்ஸோ(Marazzo) என்ற பெயரில் வெளிவர இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ‘’மரஸ்ஸோ’’ என்பதற்கு மகிழ்ச்சியை கொடுப்பதற்காக பிறரை சுமந்து செல்பவன் என்பது பொருள். மஹிந்திராவின் புதிய மரஸ்ஸோ கார், மூன்று வரிசை இருக்கை வசதியுடன் வருகிறது. 7 பேர் தாராளமாக பயணிக்கும்படி  இருக்கும். மேலும், 7, 8 மற்றும் 9 பேர் செல்வதற்கான இருக்கை அமைப்புகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய கார், மோனோகாக் எனப்படும் ஒற்றை உடல்கூடு கட்டமைப்பில்  உருவாக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா-சாங்யாங் கூட்டணி இணைந்து உருவாக்கிய 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்படும் என தெரிகிறது. பெட்ரோல் இன்ஜின் மாடலிலும் வருகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக்  கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட இருக்கிறது. உட்புறத்தில் தரமான பாகங்கள் மற்றும் அதிக சிறப்பம்சங்களை இந்த காரில் கொடுத்து, வாடிக்கையாளர்களை மஹிந்திரா அசத்தும் என கருதப்படுகிறது. இப்புதிய கார், ₹10  லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்