SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசத்தும் யமஹா ரே இசெட்ஆர் ஸ்ட்ரீட் ராலி

2018-08-12@ 00:31:40

யமஹா ரே ஸ்கூட்டரின் ஸ்ட்ரீட் ராலி எடிசன் மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இளைஞர்களை கவரும் பல்வேறு கவர்ச்சிகரமான விஷயங்கள் இந்த விசேஷ மாடலில்  இடம்பெற்றிருந்தது. இந்த ஸ்கூட்டர் இரண்டு இரட்டை வண்ண கலவையில் காட்சியளித்தது. இந்த ஸ்கூட்டரில் விசேஷ பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கர், 6 ஸ்போக்ஸ் தங்க வண்ண அலாய் வீல் இதன் மற்றொரு முக்கிய அம்சமாக  இருந்தது.

சஸ்பென்ஷனின் ஸ்பிரிங்குகளிலும் தங்க வண்ண முலாம் பூச்சுடன் காட்சி தந்தது. இந்த ஸ்கூட்டரில் அலுமினிய புட்ரெஸ்ட், கருப்பு வண்ண இன்ஜின் கார்டு, கைப்பிடிகளில் தங்க வண்ண அலங்காரம் உள்ளிட்டவை  கண்ணை கவரும் அம்சங்களாக இருந்தன. அதாவது, கஸ்டமைஸ் செய்யப்பட்ட ராலி ரேஸ் ஸ்கூட்டர் போன்று காட்சி தருகிறது. ராலி ரெட் மற்றும் ரேஸிங் புளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு  வந்துள்ளது. ₹57,898 என்ற விலையில் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விற்கப்படுகிறது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்