SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

வருகிறது ஹூண்டாய் மினி கார்

2018-08-12@ 00:31:38

வரும் 2020ம் ஆண்டிற்குள் 8 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதில், 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் QXI என்ற குறியீட்டு பெயரில் புதிய  எஸ்யூவி ரக மாடலை ஹூண்டாய் அறிமுகம் செய்ய உள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தைவிட மிக குறைவான விலையில் ஒரு மைக்ரோ எஸ்யூவி ரக மாடலையும் ஹூண்டாய் களமிறக்க உள்ளது. இது, ரெனோ கிவிட்  காருக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படுகிறது. இதை, ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவன தலைவர் ஒய்.கே.ஷூ உறுதி செய்துள்ளார்.

புதிய மைக்ரோ எஸ்யூவி ரக கார், மார்க்கெட்டிற்கு வர 3-4 ஆண்டுகள் வரை பிடிக்கும். இப்புதிய காரில், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அல்லது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. வடிவமைப்பிலும்,  வசதிகளிலும் போட்டியாளர்களைவிட மிகச்சிறப்பாக இருக்கும் என்கிறது ஹூண்டாய். ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் உள்ள பல முன்னணி கார் மாடல்களுக்கு இப்புதிய மைக்ரோ எஸ்யூவி கார் போட்டியாக அமையும் என  எதிர்பார்க்கப்படுகிறது. ₹4 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கலாம்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்