நாகை அருகே பெரும் பரபரப்பு சாராய வியாபாரியை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் : 1000 லிட்டர் அழிப்பு: மோட்டார் சைக்கிளுக்கு தீ
2018-08-11@ 03:45:53

நாகை:நாகை அருகே சாராய வியாபாரியை சுற்றி வளைத்து சரமாரியாக பொதுமக்கள் தாக்கினர். இதில் ஒரு பைக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் 1000 லிட்டர் சராயம் அழிக்கப்பட்டது. நாகை ஒன்றியம் பாப்பாக்கோவில் கருவைகாட்டு பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளச்சாராய விற்பனையில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் வந்தன. கள்ளச்சாராயத்தை குடிக்கும் அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் தங்களுக்குள் சண்டை இடுவதுடன், அந்த வழியாக கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை கிண்டலும் செய்து வருகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கள்ளச்சாராய விற்பனையை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தனர். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் அரிவாள், கம்பால் நேற்று முன்தினம் இரவு பொதுமக்களை தாக்க தொடங்கினர். இதனால் சாராய வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
இதில் ஒருவருக்கு அரிவாள் வெட்டும், 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமும் அடைந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாராய வியாபாரிகளின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 லிட்டர் கள்ளச்சாராய மூட்டைகளை பறிமுதல் செய்து சாலையில் போட்டு உடைத்தனர். எங்கள் கிராமத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டால் நாங்கள் கிராமத்தை விட்டு வெளியேற போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்தும் நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்களை சமரசம் செய்தனர். இதுதொடர்பாக சாராய வியாபாரிகள் 3 பேரை பிடித்து சென்று விசாரிக்கின்றனர். பொதுமக்களுக்கும் சாராய வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
தாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டம் 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு தள்ளாடும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம்
பல கட்ட போராட்டம் நடத்தியும் பயனில்லை ₹100 கோடி வழங்காமல் ஏமாற்றும் சர்க்கரை ஆலை
2011 தேர்தல் வாக்குறுதியாக ஜெயலலிதா அறிவித்தது வேலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அறிவிப்பு காற்றோடு போச்சு
புதுச்சேரியில் மருந்து நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி
நாமக்கல் வழியாக கரூர்-சென்னைக்கு விரைவு ரயில் இயக்க எதிர்பார்ப்பு
தீர்த்தக்குளங்கள் நிறைந்த திருச்செங்கோடு மலை
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு