SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பந்தலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை அட்டகாசம்

2018-08-11@ 03:44:35

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அம்மங்காவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஒற்றை காட்டு யானையால் கிராம மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர். நேற்று காலை அப்பகுதி குடியிருப்பு மற்றும் தேயிலைத்தோட்டத்தில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. இதேபோல் பந்தபிலா, பொன்னானி உள்ளிட்ட பகுதிகளிலும் யானை சுற்றித் திரிந்தது. காட்டு யானையை பொதுமக்கள் விரட்டுவதற்கு முயற்சித்தும் பயன் இல்லாததால் யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பிதர்காடு வனசரகர் மனோகரன் உத்தவின்பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி, வனத்துறையினர் கூறுகையில், ‘கூட்டமாக உள்ள கூட்டத்தில் இருந்து இந்த யானை பிரிந்து வழிதவறி வந்துள்ளது. இந்த யானையை கண்காணித்து விரைவில் வனத்திற்குள் விரட்டுவோம்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்