SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடன் பிரச்னையால் பரிதாபம் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி பெண் பலி: 3 பேருக்கு சிகிச்சை

2018-08-11@ 03:43:39

கோவை: கடன் பிரச்னை காரணமாக குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் ஒருவர் உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் 3 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை குனியமுத்தூர் அய்யப்பன் நகரை சேர்ந்த  ஆறுமுகம் என்பவர் மகன் ஜானகிராமன் (44). இவர் கரும்புக்கடை அருகேயுள்ள சாரமேடு பகுதியில் பெண்களுக்கான ஆடை தயாரிக்கும் கார்மென்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மனைவி சசிகலா (37). இவர்களுக்கு சிநேகா (16), ஹேமாவர்ணா (14) என இரு மகள் உள்ளனர். சிநேகா பிளஸ்-2 படிக்கிறார். ஹேமாவர்ணா 9ம் வகுப்பு படித்து வருகிறார்.  ஜானகிராமன் தொழில் தொடர்பாக பல லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த கடன் தொகையை திருப்பி தர முடியாமலும், தொழிலை சிறப்பாக நடத்த முடியாமலும் தவித்து வந்தார். கார்மென்ட்ஸ் நிறுவனத்தை மூடினாலும் இழப்பு ஏற்படும் என்பதால் கவலையுடன் காணப்பட்டார்.

கடனில் இருந்து மீள முடியாத நிலையில் ஜானகிராமன் தனது மனைவியுடன் பேசி, குடும்பத்துடன் தற்கொலைக்கு முடிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஜானகிராமனும், அவர் மனைவியும் இரு மகள்களுக்கு விஷம் கொடுத்த பிறகு அவர்களும் விஷம் குடித்தனர். தொடர்ந்து ஜானகிராமன் தனது அண்ணன் கார்த்திகேயனின் செல்போனில் அழைத்து பேசியுள்ளார். அப்போது அவர் நான் குடும்பத்தினருடன் விஷம் குடித்து விட்டேன், எங்களை அடக்கம் செய்து விடுங்கள் எனக்கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், உடனடியாக ஜானகிராமன் வீட்டுக்கு சென்று மயங்கி கிடந்த 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதில் சசிகலா நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜானகிராமனுக்கு கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மிரட்டலுக்கு பயந்து அவர் குடும்பத்தினருடன் விஷம் குடித்திருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

  • ebolaaa_viruss1

    காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்