SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணல் கடத்தலை தடுக்க முயன்றதால் ஆத்திரம் கடலாடி துணை தாசில்தாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி

2018-08-11@ 03:42:45

சாயல்குடி: மணல் திருட்டை தடுக்க முயன்ற துணை தாசில்தார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் சாயல்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே குதிரைமொழி பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடலாடி துணை தாசில்தார் செந்தில்வேல்முருகன், நேற்று அதிகாைல 5 மணியளவில் குதிரைமொழி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றியபடி வந்து கெ்ாண்டிருந்த டிராக்டரை அவர் வழிமறித்தார். இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பல், டிராக்டரை நிறுத்தாமல் அதிவேகத்தில் செந்தில்வேல்முருகனை நோக்கி மோதுவதற்காக வந்தது.

சுதாரித்துக் கொண்ட அவர் தாவிக் குதித்து ஓடி தப்பினார். இதனால் நிலைதடுமாறி, அருகே இருந்த பனைமரத்தின் மீது மோதி டிராக்டர் விபத்துக்குள்ளானது. டிராக்டரை விட்டுவிட்டு டிரைவர் உள்ளிட்ட கும்பல்  தப்பிச் சென்றது. துணை தாசில்தார் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து, மேல்நடவடிக்கைக்காக பரமக்குடி உதவி கலெக்டரிடம் டிராக்டரை ஒப்படைத்தனர்.  இதுதொடர்பாக டிராக்டர் டிரைவர் சாயல்குடி அருகே தரைக்குடியைச் சேர்ந்த சக்திவேல் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்