SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யானை வழித்தடத்தில் கட்டிடங்கள் அனுமதியற்ற ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ் ; 48 மணி நேரத்தில் சீல் வைக்க முடிவு

2018-08-11@ 03:41:28

ஊட்டி: நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் அனுமதியற்ற ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நேற்று துவங்கியது.  நீலகிரி மாவட்டம் ஊட்டி அருேகயுள்ள முதுமலை, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், மாயார் உள்ளிட்ட இடங்கள் முதுமலை புலிகள் காப்பகத்தில் வருகிறது. இப்பகுதியில், சிலர் யானை வழித்தடங்களில் ரிசார்ட்ஸ் மற்றும் காட்டேஜ்களை நடத்தி வருகின்றனர். இந்த கட்டிடங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், யானை வழித்தடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 மணி நேரத்திற்குள்  மூடி சீல் வைக்க உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி நேற்று துவங்கியது. அடுத்த 48 மணி நேரத்திற்கு பின் அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு சீல்வைக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் மசினகுடியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்கள் குறித்த பட்டியலை தயாரித்து அளிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டதன் ேபரில், இந்த  பட்டியலை தயார் செய்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அதில், 39 கட்டிடங்கள் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தோம். இதில், 12 கட்டிடங்களின் உரிமையாளர்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள், அவர்கள் அனுமதி பெற்றதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சமர்பிக்காதபட்சத்தில் அந்த 12 கட்டிடங்களுக்கும் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 கட்டிடங்களின் உரிமையாளர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாத நிலையில், அந்த கட்டிடங்களை உடனடியாக பூட்டி சீல் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், தற்போது கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் 15 ரிசார்ட்களில் 10 கட்டிடங்களை உடனடியாக மூடி சீல் வைக்கவும், சோலூர் பேரூராட்சி செயல் தலைவர் தலைமையில் 22 ரிசார்ட்டுகளில் 10 கட்டிடங்களுக்கு உடனடியாக மூடி சீல் வைக்கவும், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் இரு கட்டிடங்களை மூடி சீல் வைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே  இந்த கட்டிட உரிமையாளர்கள் 48 நேரத்திற்குள் தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற வேண்டும். இல்லையேல், அடுத்த 48 மணி நேரத்திற்கு பின் அதிகாரிகள் மூடி சீல் வைத்துவிடுவார்கள். அதற்கான நோட்டீஸ்கள் தற்ேபாது கொடுக்கப்பட்டுள்ளது. ஆள் இல்லாத கட்டிடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்