SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரக்காணத்தில் மழை உப்பு உற்பத்தி பாதிப்பு

2018-08-11@ 02:05:50

மரக்காணம்: மரக்காணத்தில் பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இதில் இருந்து ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் உப்பு உற்பத்தி செய்து புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்த தொழிலை நம்பி இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு ஆண்டு தோறும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து அக்டோபார் மாதம் வரையில் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம் போல் உப்பு உற்பத்தி துவங்கியது. கோடை வெயிலில்தான் உப்பு உற்பத்தி அதிகமாக இருக்கும். இப்பகுதியில் ஜனவரி மாதத்தில் இருந்து கோடை மழை பெய்யவில்லை. மேலும் வழக்கத்துக்கு மாறாக இப்பகுதியில் கோடை முடிந்தும் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது.

இதனால் உப்பு உற்பத்தியும் அமோகமாக இருந்தது. இங்கு உப்பு உற்பத்தி அதிகமானதால் உப்பின் விலையும் வீழ்ச்சியடைந்தது. இதனால் அதிகமாக உப்பு உற்பத்தி செய்தும் நஷ்டம் அடையும் நிலைக்கு உப்பு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் நேற்று இப்பகுதியில் பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் இங்கு அனல் காற்றின் தாக்கம் ஓரளவு குறைந்தது. இதனால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இங்கு பெய்த கன மழையால் உப்பளங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்