SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாகன விற்பனை ஜூலையில் சரிவு

2018-08-11@ 02:05:47

புதுடெல்லி: பயணிகள் வாகன விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 2.71 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்துக்கான வாகன விற்பனை நிலவரத்தை இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: உள்நாட்டில் கடந்த மாதம் 2,90,960 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்கு முந்தைய ஆண்டு ஜூலையில் இந்த எண்ணிக்கை 2,99,066 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 2.71 சதவீதம் சரிந்துள்ளது. இதுபோல் கார் விற்பனையும் 1,92,845ல் இருந்து 1,91,979 ஆக குறைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனை 9.67 சதவீதம் உயர்ந்து 11,50,995 ஆகவும், அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து டூவீலர் விற்பனை 8.17 சதவீதம் உயர்ந்து 18,17,077 ஆகவும் அதிகரித்துள்ளது.  வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 29.65 அதிகரித்து 76,497 ஆக இருந்தது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்