SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

பெட்ரோலில் கலப்பதற்காக இன்னும் 4 ஆண்டில் எத்தனால் உற்பத்தியை 3 மடங்காக உயர்த்த இலக்கு : ரூ12,000 கோடி மிச்சமாகும் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

2018-08-11@ 02:05:43

புதுடெல்லி: இன்னும் 4 ஆண்டுகளில் எத்தனால் உற்பத்தியை 3 மடங்கு உயர்த்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் கச்சா எண்ணெய் செலவு ரூ12,000 மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்ைதயில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவால் சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. விலையை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் வரிகளை குறைக்க தயாராக இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் பல ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ள நிலையில், சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தற்போது பெட்ரோலில் 3.8 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. இந்த அளவை 2022ல் 10 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை கட்டுப்படுத்தப்படும் என அரசு கருதுகிறது.

இந்நிலையில், உலக பயோ எரிபொருள் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாடு முழுவதும் 12 பயோ சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ10,000 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதில், பண்ணை கழிவுகள் போன்றவற்றில் இருந்து பயோ எரிபொருள் தயாரிக்கப்படும். இது, கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டிய நிலையை குறைக்கும். அதோடு, விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். ஊரக வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும். கரும்பு விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 20 அதிகரித்து ரூ275ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். குறிப்பாக, சர்க்கரை ஆலை கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிப்பதால், பண்ணை கழிவுகள் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆளாகாத வகையில் வெளியேற்றுவதை உறுதி செய்யும். 2002ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது பெட்ரோலில் எத்தனால் கலக்க தொடங்கப்பட்டது. அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாஜ தலைமையிலான ஆட்சி வந்ததும் பெட்ரோலில் எத்தனால் கலப்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.

 இதன் பயனாக 2013-14ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு 38 கோடி லிட்டர். இது 2017-18ல் 141 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு சுமார் ரூ4,000 கோடி மிச்சம் ஆகியுள்ளது. இதை இன்னும் 4 ஆண்டில் 450 கோடி லிட்டர்களாக உயர்த்த வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு. இதன்மூலம் ரூ12,000 கோடி மிச்சமாகும். இதுபோல் பெட்ரோலில் எத்தனால் கலப்பது 2022ல் 10 சதவீதமாகவும், 2030ல் 20 சதவீதமாகவும் உயர்த்தப்படும். என்றார். விவசாய கழிவுகளில் இருந்து பயோ எரிபொருள் தயாரிப்பது தொடர்பாக கடந்த ஜூன் மாதத்தில் மத்திய அரசு தேசிய கொள்கை வகுத்து ஒப்புதல் அளித்தது. பசுஞ்சாணத்தில் இருந்து எடுக்கப்படம் பயோ எரிவாயு வாகனங்களில் பயன்படுத்தப்படுவதால் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்துள்ளது. இதுதவிர சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பிளாஸ்டிக் கழிவுகளை சாலை போட பயன்படுத்துவது, சோலார் மின் உற்பத்தி, எல்இடி பல்புகள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழை பெண்கள் அடுப்பங்கரை புகையில் இருந்து விடுபடவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் 5 கோடி இலவச சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்