SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ8 கோடி மதிப்பிலான மஞ்சள் ஓராண்டாக தேக்கம் : விலை உயராததால் விவசாயிகள் விரக்தி

2018-08-11@ 02:05:02

கோவை: கடந்த ஓராண்டாக போதிய விலை கிடைக்காததால் கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்பட்ட ரூ8 கோடி மதிப்பிலான 10 ஆயிரம் குவின்டால் மஞ்சள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது. கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், நரசிபுரம், கரடிமடை, மாதம்பட்டி, மத்திப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இங்கு விளையும் மஞ்சளை விவசாயிகள் கோவை மற்றும் தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏல முறையில் விற்பனை செய்கின்றனர். கடந்த 7 ஆண்டுக்கு முன்பு ஒரு குவின்டால்(100 கிலோ) மஞ்சள் ரூ17 ஆயிரத்திற்கு விற்பனையானது. பின்னர் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சராசரியாக ரூ7 ஆயிரமானது. பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக சராசரியாக ரூ8 ஆயிரமாக உள்ளது. ஒரு குவின்டால் ரூ9,500க்கு குறையாமல் விற்றால் தான் லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனால்  விலை உயரும் வரை விற்காமல் கடந்த ஓராண்டுக்கு மேலாக கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 8,500 ஆயிரம் குவின்டாலும், தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,500  குவின்டாலும் இருப்பு வைத்து, பொருளீட்டு கடன் பெற்றுள்ளனர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மஞ்சளின் தற்போதைய மதிப்பு ரூ8 கோடியாகும். வரும் மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் புதிதாக அறுவடை மஞ்சள் வர உள்ளது. அப்போது வரத்து அதிகரிக்கும், விலை மேலும் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் வரும் நாட்களில் மஞ்சளை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தற்போது இருப்பிலுள்ள மஞ்சள் விற்பனையாகாமல் தொடர்ந்து தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூடம் தரப்பில் கூறுகையில், ‘விவசாயிகள் தற்பொழுது ஒழுங்கு முறை விற்பனை கூடம் தவிர தங்களது குடோன்களிலும் ஆயிரக்கணக்கான குவின்டால் மஞ்சளை இருப்பு வைத்துள்ளனர். இதனால் தேக்க நிலை 10 ஆயிரம் குவின்டாலை தாண்டும். தற்போது கிழங்கு மற்றும் விரலி மஞ்சள் விலை குவின்டால் ரூ7,500 முதல் ரூ8,500 வரை நிலவுகிறது. இந்த விலை வரும் டிசம்பருக்கு பின்னர் உயர்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. அதற்கேற்ப விவசாயிகள் முடிவெடுத்து கொள்ள வேண்டும்,’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்